close
Choose your channels

இன்றைய 'லியோ' போஸ்டரில் என்ன டேக்லைன் இருக்கும்? விஜய் ரசிகர்கள் ஆர்வம்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில் இந்த மூன்று போஸ்டரிலும் மூன்று டேக் லைன் வெளியாகி இருப்பதை விஜய் ரசிகர்கள் கவனித்து இருப்பார்கள். இந்த நிலையில் இன்று நான்காவது போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில் அதில் என்ன டேக் லைன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான மூன்று போஸ்டர்களில் வெளியான மூன்று டேக் லைன் இதுதான்:

Keep Calm And Avoid The Battle

Keep Calm And Plot Your Escape

Keep Calm And Prepare For Battle

ஒவ்வொரு டேக்லைனிலும் அமைதியாக இருங்கள் என்று கூறப்பட்டாலும் போரை தவிர்க்கவும், தப்பிக்க திட்டமிடுங்கள், போருக்கு தயாராகவும் என்று இருப்பதால், அமைதியாக இருக்கும் ஒருவனை வம்புக்கு இழுக்கும்போது அவன் முடிந்தவரை தப்பிக்க முயற்சித்து அதன்பின் ஒரு கட்டத்தில் போருக்கு தயாராவது தான் இந்த படத்தின் கதை என்பது ஊகிக்க முடிகிறது.

இந்த நிலையில் இன்று நான்காவது போஸ்டர் வெளியான பின்னர் கிட்டத்தட்ட கதையை கணித்து விடலாம் என்றே தெரிகிறது. இன்றைய நான்காவது போஸ்டரில் என்ன டேக்லைன் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.