இன்று வெளியாகும் 'தக்லைஃப்' பாடல்.. சுகர் பேபி என்றால் சர்ச்சைக்குரிய விஷயமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நடந்த நிலையில், தற்போது படக்குழுவினர் மும்பையில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல், இன்று இந்த படத்தில் இடம்பெற்ற 'சுகர் பேபி' என்ற பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது.
‘சுகர் பேபி’ பாடல் ப்ரோமோ வீடியோவில் த்ரிஷா இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உள்ளதை அடுத்து, ஒரு சர்ச்சை எழலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ‘சுகர் பேபி’ என்றால், வயதான ஆணுடன் பொருளாதார மற்றும் உடல் ரீதியான தேவைகளுக்காக வாழும் ஒரு பெண்ணை குறிக்கும் என்று பொருள் என கூறப்படுகிறது.
இந்த பாடலில் ‘சுகர் பேபி’ என்ற வார்த்தை வருவதால், த்ரிஷாவின் கேரக்டர் சர்ச்சைக்குரியதாக இருக்குமா என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானவுடன் இது குறித்த சர்ச்சைகள் எழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் படங்கள் தனித்தனியாக வெளியானாலே சர்ச்சைகள் ஏற்படும் நிலையில், இப்போது இருவரும் இணைந்துள்ள ஒரு படத்தில் ஒரு சர்ச்சை கூட இல்லாமல் இருந்தால் எப்படி? என்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மொத்தத்தில், இந்த பாடல் சர்ச்சையை ஏற்படுத்துமா, அல்லது ரசிகர்கள் அதை அசால்டாக கடந்து போவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sweet surprise hits tomorrow at 5pm. Don’t miss it!#SugarBaby Second Single from May 21#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
— Raaj Kamal Films International (@RKFI) May 20, 2025
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran… pic.twitter.com/2oRMFZGgc5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments