16 வயதில் உலகப்புகழ் பெற்ற நடிகை மர்ம மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

16 வயதில் உலகப் புகழ் பெற்ற நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் தொலைக்காட்சி தொடரான என்ற டாட்லர்ஸ் & டியரஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை கைலியா போஸி. 16 வயதான இவர் உலகப் புகழ் பெற்று உள்ளார் என்பதும் இவருக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் கைலியா போஸி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கைலியா போஸி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது .

தனது மகளின் மரணம் குறித்து கைலியா போஸின் தாயார் கூறியபோது, ‘என் மகளின் மரணம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை எங்களை விட்டுப் போய்விட்டது. மகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் எதுவும் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கைலியா போஸி திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

More News

நடிகர் மாதவன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

 நடிகர் மாதவன் நடித்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயன்ற கருணாஸ் பட நடிகை கைது!

முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயற்சித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துவது .

நெல்சனுடன் நேருக்கு நேர் மோதிய கவின்: வைரல் வீடியோ

நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் நேருக்கு நேராக  மோதும் இண்டோர்  கேம் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியுடன் திடீரென முதலமைச்சரை சந்தித்த 'ராக்கிபாய்' யாஷ்!

கேஜிஎஃப் படத்தில் நடித்த 'ராக்கிபாய்'  யாஷ், தனது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசனின் 'விக்ரம்': டிஜிட்டல், சாட்டிலைட் உரிமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக