close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'என்.ஜி.கே' படத்திற்கு பின்னர் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி என ஒரு நட்சத்திர கும்பலே உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. மோகன்பாபு போலவே இன்னும் ஒருசில பிரபலங்கள் இந்த படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏர்டெக்கான் நிறுவனர் ஜிஆர் விஸ்வநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான இந்த படத்தை 2D நிறுவனமும், ஆஸ்கார் விருது பெற்ற சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

ஏற்கனவே தெலுங்கு நடிகர் மோகன்பாபு, மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.