ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு… படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

“மிஷன்:இம்பாசிபிள்“ வரிசை படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் டாம் க்ரூஸ். தற்போது இந்த வரிசையில் “மிஷன்: இம்பாசிபிள் 7“ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டனில் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுவருகிறார்.

இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் டாம் க்ரூஸின் விலையுயர்ந்த BMW x7 கார் மற்றும் 1,000 பவுண்ட்ஸ் மதிப்புள்ள உடைமைகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்ன்ணு கருவியைப் பயன்படுத்தி உடனடியாகக் காரை மீட்டுள்ளனர். ஆனால் காரில் இருந்த உடைமைகள் அனைத்தும் திருடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற நடிகர் ஒருவரின் கார் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டச் சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் டாம் க்ரூஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பர்மிங்காம் நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவருந்திய செய்தியும் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

 

இந்தியாவின் பிரபல பாடகி ஆஷா போஸ்லே பர்மிங்காம் சாலையில் “பிர்மிங்காம்“ எனும் பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். இந்த உணவகத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்த நடிகர் டாம் க்ரூஸ் சிக்கன் டிக்காவை ஆர்டர் செய்து விரும்பி சாப்பிட்டாராம். அதோடு 2 ஆவது பிளேட் சிக்கன் டிக்காவை ஆர்டர் செய்யும்போது இன்னும் கூடுதலாக காரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

ஒருபால் திருமணத்தில் பாரம்பரியமும் வேணும்… புரட்சியில் மலர்ந்த கதை!

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதைத்தான் இந்த உலகம் இன்றைக்கும் விரும்பி வருகிறது.

பாரா ஒலிம்பிக் போட்டி: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை!

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றது என்பது தெரிந்ததே.

விஜய் டிவியில் இருந்து வெளியேறி, முன்னணி சேனலுக்கு மாறிய வனிதா!

நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இல் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் கிடைத்த பிரபலத்தின் காரணமாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரை தான் திருமணம் செய்ய போகிறேன்....! மனம் திறந்த சீரியல் நடிகை....!

மனசெல்லாம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நாயகி சந்திரா. விஜய் டிவியில் கடந்த 2007-ல்  ஒளிபரப்பாகி காதலர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான், "காதலிக்க நேரமில்லை".

என்ன சிம்ரன் இதெல்லாம்: கீர்த்தி பாண்டியனின் கிளாமர் வீடியோ வைரல்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும், 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் நடித்தவருமான கீர்த்தி பாண்டியன் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார்