'தளபதி 69' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அதே நேரத்தில் இன்னொரு பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ;தளபதி 69; படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் நாளை காலை 11 மணிக்கு இந்த போஸ்டர் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு ’தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில் அதே 11 மணிக்கு சசிகுமார் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை 11 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை காலை ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சசிகுமார் படங்களின் போஸ்டர் வெளியாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்கள் இதனை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
No need to wait for 11:11.. we’re serving your wish at 11 AM itself 😁#Thalapathy69FirstLook tomorrow 11 AM 🔥#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01… pic.twitter.com/ox66WdxcJc
— KVN Productions (@KvnProductions) January 25, 2025
First look of @SasikumarDir & @Dir_Rajumurugan's next film, produced by @Olympiamovis, unveiling tomorrow at 11.00 AM by the brilliant filmmaker & actor @anuragkashyap72! 😎
— Olympia Movies (@Olympiamovis) January 25, 2025
#OlympiaMoviesNext
🔥 Don't miss out on the big reveal!
@proyuvraaj pic.twitter.com/jXqr5FaU1X
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments