close
Choose your channels

சிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்

Friday, April 23, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் நாளை சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதவுள்ளது. முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி சென்னை, பெங்களூரு அணி இருக்கும் நிலையில் நாளைய போட்டியில் சென்னை வென்றால் முதல் இடத்திற்கு மீண்டும் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் அணியில் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது. ஒருவேளை மாற்றம் இருந்தாலும் ஷர்துல் தாக்கூர் மட்டுமே நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக ஒரு ஸ்பின் பவுலர் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது

மேலும் தோனியின் பேட்டிங் குறித்து நமது பேட்டியில் கூறிய பாலாஜி வேணுகோபால் தோனி நல்ல பேட்ஸ்மேன்தான் என்றாலும், சிங்கம் தான் என்றாலும், அந்த சிங்கத்திற்கும் வயதாகிவிட்டது என்று கூறினார்

அதேபோல் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது 250 ரன்கள் எடுத்தாலும் அதை சேஸ் செய்யக்கூடிய வலுவான பேட்டிங் சென்னை அணியிடம் இடம் இருக்கிறது என்றும் அதனால் நாளை சென்னை அணி தான் வெல்லும் என்றும் கூறினார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.