close
Choose your channels

நாளை முதல் 'ராட்சசி' படத்திற்கு கட்டணக்குறைப்பு!

Thursday, July 11, 2019 • தமிழ் Comments

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு அரசு பள்ளியின் அவல நிலையையும், ஒரு தலைமை ஆசிரியை நினைத்தால் அந்த பள்ளி தனியார் பள்ளிகளை விட சிறந்த பள்ளியாக மாறும் என்பதையும் இந்த படத்தில் சுவாரஸ்யமாக கூறப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என விமர்சகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்

இந்த நிலையில் நாளை முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'ராட்சசி' படம் பார்க்க கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மூலம் மொத்தமாக டிக்கெட் புக் செய்தால் கட்டணத்தில் 50% சலுகை என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த சலுகை அறிவிப்பால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் அதிக அளவில் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு உள்ளது என்பதும், இந்த படத்தை பார்த்து ஒரே ஒரு அரசு பள்ளியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz