நாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. படக்குழு அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், நாளையும் சில படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஷம் நடிப்பில் உருவான ’அஸ்திரம்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஷாம், நிரா, ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தியின் இசையில் உருவான இந்த படத்தை பெஸ்ட் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ’அஸ்திரம்’ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவில்லை, புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றும், "இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைவதை புரிந்துகொள்கிறோம்" என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELEASE DATE WIL BE ANNOUNCED SOON THANK U 🙏 pic.twitter.com/NVZLHoRa5b
— SHAAM (@shaamactor) March 5, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments