இந்திய அளவில் ஓடிடி ரிலீஸ்: டாப் 10-ல் 3 தமிழ் படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

இந்திய அளவில் கடந்த சில மாதங்களில் ஓடிடியில் ரிலீசான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த 10 திரைப்படங்களில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இவற்றில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஓடிடியில் ரிலீசாகி இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் மறைந்த நடிக்ர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த ‘தில் பேச்சாரே’ என்ற திரைப்படம் வசூல் அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ இரண்டாவது இடத்தையும், நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ 8வது இடத்தையும், ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய அளவில் அதிக வசூல் செய்த ஓடிடி ரிலீஸ் படங்களில் மூன்று படங்கள் தமிழ் படங்கள் என்பது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. மேலும் இந்த பட்டியலில் 4வது இடத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.