ஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். மிகச் சிறந்த பேட்டிங் வீரரான இவர் தற்போது டி20 போட்டி மற்றும் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். காரணம் கடந்த உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய நாள் அதிக போதைப்பொருள் அருந்திய நிலையில் ஒரு பாரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

விளையாட்டு போட்டியின்போது இவர் போதைப் பொருள் பயன்படுத்த வில்லை என்றாலும் அலெக்ஸின் கைதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவரை ஒதுக்கியே வருகிறது. இதனால் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். தற்போது டி20 போட்டிகளில் அதிரடி காட்டி வரும் இவர் ஐபிஎல் இல் கலந்து கொண்டு மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் ஏலத்தில் அலெக்ஸை எந்த அணிகளும் கண்டுகொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16..25 க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எந்த விளையாட்டு வீரரும் இந்தளவு அதிக தொகைக்கு ஏலம் போகவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டரான இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து உள்ளது.