'கைதி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ? லோகேஷின் வேற லெவல் திட்டம்!

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பதும் அவரது ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய படங்களில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்திலும் சஞ்சய்தத், கெளதம் மேனன், நிவின் பாலி, மிஷ்கின், விஷால் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷின் அடுத்த படமான ’கைதி 2’ படத்திலும் பிரபலமான ஹீரோ ஒருவர் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியை ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆக்ரோஷமாக வில்லனாக காட்டிய லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தில் வேற லெவல் வில்லன் கேரக்டர்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’கைதி 2’ திரைப்படத்தில் வேற லெவல் சம்பவம் செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரும் ‘கைதி 2’ படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுவதால் ’கைதி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அஜித்தின் 'துணிவு' படத்தில் இதுதான் ஹைலைட்.. கசிந்த ஆச்சரியமான தகவல்!

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

பொங்கல் ரிலீஸ் படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. நன்றி தெரிவித்த நடிகர்!

வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் படத்தின் ஹீரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறிய நிலையில் அவருடைய வாழ்த்த்க்கு தனது நன்றியை அந்த நடிகர் தெரிவித்துள்ளார். 

டிசம்பர் 4ல் 'வாரிசு' செகண்ட் சிங்கிள்? அன்று என்ன விசேஷம் தெரியுமா

தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தயவுசெஞ்சு வெளியே போயிருங்க.. ஷிவினிடம் ஆவேசமாக கூறும் ஏடிகே

மரியாதை இல்லாமல் பேசுவதாக இருந்தால் தயவு செய்து வெளியே போங்கள் என வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்கும் ஷிவினிடம் நீதிபதி கேரக்டரில் நடிக்கும் ஏடிகே ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகை பாஜகவில் இருந்து நீக்கம்: அண்ணாமலை அதிரடி அறிக்கை!

 தமிழ் திரையுலகின் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.