'அஜித் 61' படத்தில் இணையும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்!!

  • IndiaGlitz, [Monday,April 04 2022]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை செட் போடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர்களில் ஒருவர் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்றும் இன்னொருவர் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனா என்றும் கூறப்படுகிறது.

‘அஜித் 61 படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் வங்கியை கொள்ளை அடிக்கும் கொள்ளையராக அடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மோகன்லால் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மோகன்லால் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைவது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. போனிகபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.

More News

'மாநாடு 2' என எஸ்.ஜே.சூர்யா வர்ணித்த விஷால் படம்: லேட்டஸ்ட் அப்டேட்!

 சிம்பு நடித்த 'மாநாடு' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா அடுத்து விஷாலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அந்த படத்தை 'மாநாடு 2'  என்று சொல்லலாம்

விவாகரத்தான மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் வழக்கு: என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்

கவினுடன் பிரேக்-அப் ஆனது உண்மையா? முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

 பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலித்த கவின் மற்றும் லாஸ்யா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நேரெதிராக ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

'பீஸ்ட்'  டிரைலரில் உள்ள முகமூடி போட்ட வில்லன் யார்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'   திரைப்படத்தில் முகமூடி போட்ட வில்லன் யார் என்ற கேள்வி தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. 

4 கார் இருக்குதுல்ல, சைக்கிள்ல்ல ஏன் போனிங்க: விஜய்யை கிண்டல் செய்த நெல்சன்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் ஜாலியாக பேசும் பேட்டி சன் டிவியில் வரும் 10ஆம் தேதி