திருமணமாகாத இரண்டு தமிழ் நடிகைகள் கர்ப்பம்? இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் பரபரப்பு!

திருமணமாகாத 2 தமிழ் நடிகைகள் தாங்கள் கர்ப்பம் என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகைகளான நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர் ஆகிய இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ‘கர்ப்பம்’ என்ற பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பதிவு ஒரு திரைப் படத்தின் புரமோஷன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

‘வொண்டர் வுமன்’ என்ற திரைப்படத்தில் நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதாகவும் இந்த படம் கர்ப்பிணிகள் பற்றிய படம் என்றும் இந்த படத்தில் இருவருமே கர்ப்பிணிகளாக நடிக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கர்ப்பம் என்ற போஸ்ட்டை பார்த்தவுடன் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் ஆச்சரியத்துடன் கவலை அடைந்த நிலையில் தற்போது இது படத்தின் புரமோஷன் என்று தெரியவந்ததும் தான் ரசிகர்கள் நிம்மதியாகி உள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேய்ஸ்’ என்ற படத்தை அடுத்து மீண்டும் நித்யாமேனன் மற்றும் பார்வதி நாயர் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. அதேபோல் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் பார்வதி நாயர் நாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2  படங்கள்: உறுதி செய்த தயாரிப்பாளரின் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்

'பொன்னியின் செல்வன்' ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: ரசிகர்கள் அதிருப்தி!

 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஓடிடி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் ரசிகர்கள்

'சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை': சிறைக்கு செல்லுமுன் வீரவசனம் பேசும் பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சரியாக விளையாடாத இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

பிரபல நடிகையுடன் விஷால் திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

 தமிழ் சினிமாவில் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வரும் நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து விட்டதாகவும் இது குறித்த புகைப்படங்கள்

குயின்சியை ஓட ஓட விரட்டும் ஷெரினா.. என்ன காரணம்?

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக பொம்மை டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சீரியசாக இருந்தாலும் இடையிடையே சில குஷியான காட்சிகளும் இடம்பெற்றுக் கொண்டுதான்