டூரிஸ்ட் பேமிலி படத்தில் 'சுந்தரபாண்டியன்' பாடல்.. இயக்குனரை திட்டும் ரசிகர்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சசிகுமார் நடித்த ’டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களில், இந்த படம் தான் அதிக லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு பெற்று தந்தது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி திரையரங்குகளில் வெளியிடும் போது இடம்பெறவில்லை. ஆனால், தற்போது இணையத்தில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு நல்ல பாடலை ஏன் படத்திலிருந்து நீக்கி விட்டீர்கள் என இயக்குனரை ரசிகர்கள் செல்லமாக திட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ’சுந்தர பாண்டியன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற ’கொண்டாடும் மனசு’ என்ற பாடல் தற்போது ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அட்டகாசமாக இடம் பெற்றுள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலில் உள்ள காட்சிகள் மிகவும் அட்டகாசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு நல்ல பாடலை ஏன் படத்தில் இடம்பெற வைக்கவில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த பாடல் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Deleted scene from #TouristFamily👌
— AmuthaBharathi (@CinemaWithAB) May 15, 2025
Sasikumar recreating the Sundarapandian song😀🕺pic.twitter.com/0su0wWaNhY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com