close
Choose your channels

அக்டோபர் 31ஆம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? தோழியிடம் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் கேள்வி..!

Sunday, April 27, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டூரிஸ்ட் பேமிலி படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அந்த படத்தின் மேடையில் பேச வந்த இயக்குனர், அக்டோபர் 31ஆம் தேதி ’என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று தனது தோழியிடம் கேட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமார் நடிப்பில் உருவாகிய 'டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தி, ’அக்டோபர் 31ஆம் தேதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று கேட்டார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியமான ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்; அவர் அகிலா இளங்கோவன். ஆறாம் வகுப்பிலிருந்து அவரை எனக்கு தெரியும், பத்தாம் வகுப்பிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். ’என்னை அக்டோபர் 14ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறாயா? ஐ லவ் யூ’ என்று கேட்டுள்ளார்.

’நான் பலவீனமாக இருக்கும்போது, என்னுடைய அம்மா எந்த அளவுக்கு சப்போர்ட்டாக இருந்தாரோ, அதே அளவுக்கு அகிலாவும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்’ என்றும் கூறினார்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது காதலி ஆனந்தத்தில் கண் கலங்கினர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment