close
Choose your channels

திடீரென மதம் மாறிய டி.ராஜேந்தர் மகன்

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், உள்பட பல அவதாரங்களில் ஜொலித்து வரும் டி.ராஜேந்தர் சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்து மதத்திலும் ஜோதிடத்திலும் தீவிர பற்று டி.ராஜேந்தருக்கு இருக்கும் நிலையில் அவரது இரண்டாவது மகன் டிஆர் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். டி.ராஜேந்தர் முன்னிலையில் டி.ஆர்.குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டி.ஆர்.குறளரசன் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா? அல்லது டி.ராஜேந்தர் குடும்பமே இஸ்லாம் மதத்திற்கு மாறினார்களா? என்பது குறித்து விரைவில் டி.ராஜேந்தர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.