close
Choose your channels

பெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அழகுக்காக இளம்பெண்கள் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். ஆனால் தற்போது வயிறுப்பகுதி ஸ்லிம்மாகவும், இடுப்பு பெரியதாகவும், பிட்டம் பெரியதாகவும் இருக்கும் ஒரு உடலமைப்புக்காக இளம்பெண்கள் பலர் மருத்துவமனையில் குவிந்து கிடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

மெக்சிகோவில் உள்ள மருத்துவ மனைகளில்தான் இப்படி விசித்திர சம்பங்கள் நடக்கின்றன. மெக்சிகோவின் பல நகரங்களில் தற்போது வறுமை தலைவிரித்தாடுகிறது. இதற்கு நடுவில் போதைப்பொருள் விவகாரங்களும் அங்கு பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதனால் இளம்பெண்கள் பலர், ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது உடல் அமைப்புகளை மாற்றிக்கொள்ளும் செயல்களும் மெக்சிகோவில் அதிகரித்துவிட்டன.

குலியகான் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு பெண்கள் க்யூ கட்டி நிற்கிறார்களாம். இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட மருத்துவர் ஒருவர், “நார்கோ-ஆஸ்தெட்டிக்” எனப்படும் ஒரு உடலமைப்புக்காக பெண்கள் பலர் அறுவைக் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இடை சிறியதாகவும், இடுப்பு பகுதி பெரியதாகவும், பிட்டம் பெரியதாகவும், மார்பகங்கள் பெரியதாகவும் இருக்கும் இந்த நார்கோ உடலமைப்புக்காக பெண்கள் எந்த ரிக்ஸ்க்கும் எடுக்கத் தயாராகிவிட்டனர்.

மேலும் நார்கோ உடலமைப்பை விரும்பும் கணவனோ, காதலனோ தங்களுடைய துணைக்கு இதுபோன்ற உடலமைப்பிற்காக எத்தனை லட்சத்தையும் இரைக்கத் தயாராகி விட்டனர். இதனால் அறுவை சிகிச்சை எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது. நார்கோ உடலமைப்பின் மீது மோகம் அதிகரித்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் இதுபோன்ற அமைப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆண்களிடம் அதிகரித்து விட்டது.

இதைத்தவிர சிறுமிகளுக்குக் கூட அந்த நாட்டில் பிறந்த நாள் பரிசாக சில நேரங்களில் அறுவை சிகிச்சை டோக்கன் அதுவும் சொந்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே கிடைக்கிறது. இந்த டோக்கனை வைத்து சிறுமிகள் தங்களது மூக்கையோ அல்லது மார்பகங்களையோ சரிப்படுத்திக் கொள்கின்றனர்.

மெக்சிகோவைத் தவிர சில வெளிநாடுகளிலும் இந்தப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அழகின் மீது இருக்கும் மோகத்தால் நடக்கும் இத்தகைய விஷயங்களை மருத்துவர்கள் கடும் எச்சரிக்கையுடன் பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.