ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதற்காக திருச்சி அருகே ராஜா-உஷா தம்பதியை விரட்டி சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததால் உஷா என்ற ஒரு உயிர் பலியாகிய சம்பவம் காவல்துறையை மட்டுமின்றி தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து காவல்துறையே மோசமானது என்ற விமர்சனங்களும் எழுந்தது.

ஆனால் அது பொய் என்பது நேற்று மயிலாப்பூரில் முதியவர் ஒருவருக்கு புதிய லுங்கி வாங்கி கொடுத்து அரவணைத்தவரும் ஒரு காவல்துறை அதிகாரிதான் என்பது அனைவரும் தெரிந்ததே

இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, இனிமேல் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அசத்தியுள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. அவர்டான் நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் ஜான் ஒய்சிலிராஜ்.

இன்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே பணியில் இருந்த அருள்ஜான் ஒய்சிலிராஜ், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை தனியாக அழைத்து அங்கு தயாராக போட்டு வைத்திருந்த நாற்காலியில் உட்கார  வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தையும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்களையும், விரிவாக விளக்கி விட்டு பின்னர் அவர்களை புன்சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார். ஹெல்மெட் போடாதவர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மத்தியில் இப்படி ஒரு சமூக பொறுப்புடன் உள்ள அதிகாரிக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

மும்பையில் பிரபல தமிழ் நடிகையின் ரகசிய திருமணம்

ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் 'கந்தசாமி' உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

என்னையும் ரஜினியையும் அரசியல் நிச்சயம் பிரிக்கும்: கமல்

திரையுலகில் நண்பர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தாலும் இருவரும் வெவ்வெறு பாதைகளில் பயணம் செய்கின்றனர்.

நிர்பயாவின் தாய் குறித்து முன்னாள் டிஜிபி சர்ச்சை கருத்து

'ஆஷா தேவிக்கு நல்ல உடலமைப்பு உள்ளது. அவரின் மகள் எந்த அளவிற்கு அழகாக இருந்திருப்பார் என்று எண்ணி பாருங்கள்' என்று பேசியபோதே மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

'வேலைக்காரன்' சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பாஸ்' இயக்குனர்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் 'வேலைக்காரன்' என்ற வெற்றி படத்தில் நடித்த நிலையில் தற்போது பொன்ராம் இயக்கி வரும் 'சீமராஜா' படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.

இரண்டே நாளில் உடைந்தது தினகரனின் 'அமமுக?

அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை