விஜய் சேதுபதி பிறந்தநாள் பரிசு.. சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'ட்ரெயின்' படக்குழு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "ட்ரெயின்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள "ட்ரெயின்" படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள்.. மேலும், நரேன் உள்ளிட்ட சிலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதியின் 47வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து "ட்ரெயின்" படத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ரயிலில் அவர் நடந்து செல்வது போன்றும், அதன் பின்னர் டப்பிங் பணிகளில் அவர் உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகள் உள்ளன.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்திருப்பதை அடுத்து, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தம்பி @VijaySethuOffl
— Kalaippuli S Thanu (@theVcreations) January 16, 2025
உங்கள் பிறந்த நாள்
ஏழை எளியவர்க்கு
உயர்வளிக்கும் நாளாக..
நானிலம் போற்ற
நற்றமிழாய் வாழ்க!
இந்நாளை மேலும் சிறப்பிக்க #Train படத்தின் ஒரு சிறு முன்னோட்டம்
▶️ https://t.co/kTFULs2uuf@DirectorMysskin #HappyBirthdayVijaySethupathi @saregamasouth pic.twitter.com/0t4P83sM0l
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com