ஒரே ஒரு முத்த புகைப்படம்: சிக்கலில் மாட்டிய காதலர்கள்

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

அமெரிக்காவை சேர்ந்த காதலர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த ஒரே ஒரு முத்த புகைப்படம் பெரும் பரபரப்பாகி, நெட்டிசன்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியதோடு, வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பிரியர்களான கெல்லி மற்றும் கோடி ஆகிய இருவரும் காதலர்கள். உலகை சுற்றி வருவதே இவர்களுக்கு பொழுதுபோக்கு. இந்த நிலையில் பாலி என்ற பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் காதலர் நிற்க, நீச்சல் குளத்திற்கு வெளியே காதலி மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருந்தார். காதலனின் கை, சிறிது பிசகினாலும் காதலி மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து உயிரை இழக்கும் அபாயம் இருந்தது. ஆனால் இந்த அபாயத்திலும் இருவரும் முத்தமிட்டவாறு போஸ் கொடுத்திருந்தனர். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். இது ஆபத்து என்று எங்களுக்கு தெரிந்திருந்தாலும் நாங்கள் பாதுகாப்புடன் தான் இருந்தோம். நான் என் காதலியை கைவிடமாட்டேன் என்று அவரும் உறுதியாக நம்பினார்' என்று இந்த புகைப்படத்திற்கு காதலர் கெல்லி விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இதேபோன்று முயற்சிக்கலாம் என்றும், இந்த புகைப்படம் ஆபத்தானது என்றும், இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அமெரிக்க போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது

More News

விக்கிலீக்ஸ் அசாஞ்சே கைது: அமெரிக்கா, பிரிட்டனை வறுத்தெடுத்த நடிகை!

விக்கிலீக்ஸ் அசாஞ்சே கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில் இன்று பிரிட்டன் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்

தவறான உறவின்போது மரணமடைந்த இளம்பெண்: காதலன் கைது!

சுவிஸ் நாட்டின் ஓட்டல் அறை ஒன்றில் காதலர்கள் இருவர் முரட்டுத்தனமாக உறவு கொண்டதால் காதலி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதும் நிறுத்திக்கிடலாம்: கள்ளக்காதலை முடிவுக்கு கொண்டு வர முயன்ற பெண் படுகொலை!

இத்தனை ஆண்டுகள் இருந்த கள்ளக்காதல் போதும், இத்தோடு நிறுத்திவிடலாம் என்று கூறிய கள்ளக்காதலியை, கள்ளக்காதலன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை

அரசியலில் ஆரம்பப் பள்ளியில் இருக்கின்றார்: கமல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி விமர்சனம்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்சி புரிந்து வரும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரமுகரும், அம்மாநில முதலமைச்சருமான பினராயி விஜயன்,

நாயகன், நாயகிக்கு முன்னரே ஒப்பந்தமான யோகிபாபு!

பொதுவாக ஒரு திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது முதலில் இயக்குனர், நாயகன், நாயகி ஆகியோர் முடிவு செய்த பின்னரே காமெடி நடிகர்கள் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம்.