ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா? பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

'உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி திரிஷா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் திரிஷா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளின் படி இந்த படத்தில் த்ரிஷா, குந்தவை கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பதும் ராஜராஜசோழனின் அக்காதான் குந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராஜராஜசோழன் கேரக்டரில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு அக்கா வேடத்தில் த்ரிஷா, நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் குந்தவை கேரக்டர் என்பது ஹீரோ வந்தியத்தேவனுக்கு ஜோடியான கேரக்டர் என்பதால் இந்த படத்தின் நாயகியே த்ரிஷா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி  மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய 'பொன்மாணிக்கவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும்

கொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா? கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்

முன்னதாக, தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை