மன்சூர் அலிகான் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் த்ரிஷா?

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் த்ரிஷா 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள மாஸ் நடிகர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைப்’ படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திரிவிக்ரம் இயக்கிய ’அதோடு’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மிஷ்கின் - விஜய்சேதுபதி படத்தின் டைட்டில் இதுவா? வில்லனாகும் பிரபல நடிகர்..!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மனைவி ரக்சிதாவுடன் ஏற்பட்ட பிரிவு.. தினேஷ் கூறிய உருக்கமான சம்பவம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களுக்கு வாழ்க்கையில் நடந்த பூகம்பமான சம்பவங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை

விசித்ரா குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்த படம் இதுவா?

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா  தனக்கு திரையுலகில் நேர்ந்த கொடூரம் குறித்து கூறிய நிலையில் அவருக்கு நேர்ந்த  அந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த படம் எது என்பது குறித்த  தகவல்களை

திரைத்துறையில் விசித்ராவுக்கு ஏற்பட்ட கொடுமை.. குரல் கொடுப்பாரா வுமன் சேஃப்டி கமல்ஹாசன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது  பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தங்கள் வாழ்க்கையை நடந்த கசப்பான சம்பவம் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் கதைகளை பகிர்ந்து வருகின்றனர்.

சித்தார்த்தின் 'சித்தா': புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி