close
Choose your channels

சகோதரர் ஜெயம் ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய த்ரிஷா!

Friday, September 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

மேலும் இன்று ஜெயம்ரவியின் பிறந்தநாளை அடுத்து அவரது 28வது படத்தின் பூஜை தொடங்கியது என்பதும் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்த உள்ளார் என்பதும் இந்த படத்தை ’பூலோகம்’ இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் ஜெயம்ரவிக்கு நடிகை த்ரிஷா, தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘சகோதரர் ஜெயம் ரவி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று அவர் குறிப்பிட்ட டுவிட்டுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் த்ரிஷா, குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், இருவரும் இந்த படத்தில் அக்கா தம்பியாக நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் இந்த பதிவுக்கு ’இன்னும் த்ரிஷா, பொன்னியின் செல்வன் கேரக்டரில் இருந்து வெளியே வரவில்லை’ என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.