நள்ளிரவில் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் இப்போதும் அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் ’பொன்னியின் செல்வன்’ உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார். நள்ளிரவில் அம்மாவுக்காக ஸ்பெஷலாக த்ரிஷாவே கேக் தயார் செய்து இருவரும் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். த்ரிஷா செய்த கேக் குறித்து அவரது அம்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நன்றியை தெரிவித்துள்ளார். த்ரிஷா மற்றும் அவரது அம்மா கொண்டாடிய இந்த பிறந்தநாள் விழா குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா தற்போது ’ராங்கி’, ‘பரமபதம் விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, சுகர்’, ‘ராம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.