close
Choose your channels

காதலை உறுதி செய்த த்ரிஷா! காதலன் யார்?

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது தான் காதலில் விழுந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா, தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'ராங்கி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர், 'உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா, ‘சிங்கிள் பட் டேக்கன்’ என கூறியுள்ளார். இதனையடுத்து த்ரிஷா காதலில் விழுந்துள்ளது உறுதியாகியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, 'Do it when it's a want and not a need” என்று பதிலளித்துள்ளார்.

த்ரிஷா தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கி வரும் 'ராங்கி' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.