காதலை உறுதி செய்த த்ரிஷா! காதலன் யார்?

  • IndiaGlitz, [Monday,May 27 2019]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது தான் காதலில் விழுந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா, தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'ராங்கி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர், 'உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா, ‘சிங்கிள் பட் டேக்கன்’ என கூறியுள்ளார். இதனையடுத்து த்ரிஷா காதலில் விழுந்துள்ளது உறுதியாகியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, 'Do it when it's a want and not a need” என்று பதிலளித்துள்ளார்.

த்ரிஷா தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கி வரும் 'ராங்கி' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும்  பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ

அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் பிக்பாஸ் 2 ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் தற்போது யோகிபாபுவின் 'ஜோம்பி',

சிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு!

நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமான 'மஹா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ!

இணையத்தில் வெளியான வைரல் வீடியோ ஒன்றால் தெருவிளக்கில் படித்த ஒரு சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்து அந்த ஏழைச்சிறுவனின் வாழ்க்கையே ஒரே நாளில் மாறியுள்ளது

'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு!

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தில் ஆறு கதைகள் இருப்பதாகவும், இந்த படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள்,