close
Choose your channels

த்ரிஷாவின் திருமணம் குறித்த வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷாவின் திருமண வதந்தி குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே. அவர் விஜய் உடன் ’லியோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அஜித்துடன் ‘விடாமுயற்சி’, கமல்ஹாசனுடன் ‘கமல்234’, ரஜினியுடன் ‘தலைவர் 174’ என பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா, பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தியை த்ரிஷா மறுக்காமல் இருந்ததால் அது உண்மை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு பதில் அளித்து த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நீங்களும் உங்கள் அணியில் இருப்பவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியும். தயவுசெய்து அமைதியாக இருங்கள், வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து த்ரிஷாவின் திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.