close
Choose your channels

இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? த்ரிஷாவின் 'கர்ஜனை' டிரைலர்!

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'கர்ஜனை' திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின் தற்போது விரைவில் ரிலீஸாகும் நிலையில் உள்ளது. அதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கியது. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த டீசரில் அதிரடி ஆக்சன், சேஸிங், கரடியின் கர்ஜனை என முழுக்க முழுக்க ஆக்சன் அம்சங்கள் மட்டுமே இருப்பதால் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கான படம் என தெரிகிறது. த்ரிஷாவின் டூப் இல்லாத ஆக்சன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கான விருந்து என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா ஏற்கனவே 'தூங்காவனம்' உள்பட ஒருசில ஆக்சன் படங்களில் நடித்துள்ளதால் இந்த படமும் அவரது வெற்றிப்பட பட்டியலில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

த்ரிஷா, அமித், வம்சிகிருஷ்ணா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். அம்ரீஷ் இசையில் சிட்டிபாபு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சென்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 'மைனா', 'சாட்டை', 'சவுகார்பேட்டை' பொட்டு' போன்ற படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.