close
Choose your channels

த்ரிஷாவின் 'கர்ஜனை' குறித்த முக்கிய அறிவிப்பு!

Friday, June 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது 'கர்ஜனை', சதுரங்க வேட்டை 2', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் 'கர்ஜனை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 'எஸ்.டி.சி பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷா, வம்சிகிருஷ்ணா, அமித் பார்கவ், மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையில் சிட்டிபாபு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா நடித்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான 'என்.ஹெச் 10' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.