close
Choose your channels

த்ரிஷாவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷாவின் ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. த்ரிஷாவுடன், நந்தா, ரிச்சர்ட்ஸ், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷாவின் அடுத்த திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. த்ரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’ராங்கி’. இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ள கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் த்ரிஷா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பது டீசரில் இருந்து தெரிய வந்தது.

பிரபல மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’எங்கேயும் எப்போதும்’ இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.