close
Choose your channels

த்ரிஷா பிறந்த நாளில் ஆரம்பமாகும் 'பரமபத விளையாட்டு'

Friday, May 3, 2019 • தமிழ் Comments

தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' படத்தில் அறிமுகமான த்ரிஷா 20 வருடங்கள் கழித்து தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ளார். அவருடன் நடித்த நடிகைகள் அம்மா, அக்கா  வேடங்களில் நடித்து வரும் நிலையில் இன்னும் இளம் நடிகைகளுக்கு இணையாக உள்ளார் த்ரிஷா.

இந்த நிலையில் நாளை அதாவது மே 4ஆம் தேதி த்ரிஷாவின் பிறந்த நாளை அடுத்து அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'பரமபத விளையாட்டு' படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. குறிப்பாக மே 4ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz