close
Choose your channels

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் த்ரிஷாவின் அடுத்த படம்: விரைவில் ஃபர்ஸ்ட்லுக்

Saturday, September 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, விஜய்சேதுபதியுடன் நடித்த '96' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா நடித்து கொண்டிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

த்ரிஷா நடிப்பில் இயக்குனர் திருஞானம் இயக்கி வரும் திரைப்படம் 'பரமபதம் விளையாட்டு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

24ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.