ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருந்தது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முதல் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போவதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது திடீரென தள்ளிப்போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..!

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..!

"நாளை திட்டமிடப்பட்ட லெவின் கோப்பை போட்டிகளையும் அனைத்து அதிகாரப்பூர்வ ஆட்டங்களையும், மார்ச் 15 வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்" என்று ஜே-லீக்

'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரபலம் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்