'படையப்பா' நீலாம்பரியை சமாளிப்பாரா தனுஷ்?

  • IndiaGlitz, [Tuesday,November 03 2015]

இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா, 'படையப்பா' நீலாம்பரி போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், கடந்த பத்து வருட கால திரையுலக வாழ்க்கையில் த்ரிஷா இதுபோன்ற கேரக்டரில் நடித்ததில்லை என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கே சவாலாக இருந்த கேர்க்டர் நீலாம்பரி. இதே போன்ற கேரக்டரை எதிர்கொள்ளவிருக்கும் தனுஷ், எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அண்ணன் - தம்பி என இரண்டு கேரக்டர்களில் இந்த படத்தில் தனுஷ் நடிக்கின்றார். தம்பி தனுஷுக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே ஆடுகளம் மற்றும் தங்கமகன் ஆகிய இரண்டு படங்களிலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அந்த நேரங்களில் த்ரிஷாவின் தேதிகள் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதி படத்தை இயக்குகிறாரா ரஜினி மகள்?

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தின் சூப்பர் ஹிட்டை அடுத்து அதன் தயாரிப்பாளர் தனுஷ் மீண்டும் விஜய்சேதுபதி...

ஜெமினிகணேசன் பெயரில் நடிகர் ஜீவா

'ஆசை ஆசையாய்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ராம், ஈ, சிவா மனசுல சக்தி, கோ, நீதானே என் பொன்வசந்தம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஜீவா...

'காக்கா முட்டை' மணிகண்டனுடன் இணைந்த மிஷ்கின் இசையமைப்பாளர்

கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான 'நானும் ரெளடிதான்' படத்தின் சூப்பர் ஹிட், விஜய்சேதுபதி திரையுலக வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....

எம்.ராஜேஷின் அடுத்த ஹீரோ பிரபல இசையமைப்பாளரா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவாகவும், ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், தொடர்ந்து 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்....

நடிகர் சங்கத்தின் தீபாவளி பரிசு. உறுப்பினர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் புதியதாக பதவியேற்ற நாசர், விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஆக்கபூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்....