close
Choose your channels

'காதல்' குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா!

Friday, May 15, 2020 • தமிழ் Comments

இந்த கொரோனா வைரஸ் விடுமுறையில் பல நடிகைகள் தங்களது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, சமீபத்தில் தனது ரசிகர்களின் சுவராஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒன்று த்ரிஷா முதல்முறையாக காதல் குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

உங்களுடைய வாழ்க்கையில் காதலை கண்டு அறிந்துவிட்டீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, ‘நான் இன்னும் காதலை சந்திக்கவில்லை என்றும், காதல் என்பது பட்டாம் பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது என்றும், உண்மை காதல் இன்னும் நிறைய இடங்களில் இருக்கிறது என்றும் காதல் இல்லாமல் வாழவே முடியாது என்றும் அவர்  உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளார். முதல்முறையாக காதல் குறித்து மனம் திறந்து த்ரிஷா கூறிய இண்ட பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ’விண்ணைத்தாண்டி வருவாயோ’ படத்தில் இடம்பெற்ற ’மன்னிப்பாயா’என்ற பாடல் தான் தனக்கு பிடித்த பாடல் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷா, ஏற்கனவே நடித்து முடித்துள்ள ’பரமபதம்  விளையாட்டு’ மற்றும் ’கர்ஜனை’ ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz