close
Choose your channels

'சாமி 2': த்ரிஷா எடுத்துள்ள அதிரடி, அதிர்ச்சி முடிவு

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாகிய 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வந்தாலும் முதல் பாகத்தின் நாயகி த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் 'சாமி 2' படத்தில் இருந்து விலகுவதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'சாமி 2' படக்குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாகவும், இருப்பினும் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

'சாமி' படத்தில் புவனா மாமி கேரக்டரில் நடித்த த்ரிஷாவை மீண்டும் அதே கேரக்டரில் பார்க்க ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு த்ரிஷாவின் இந்த முடிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா நடிக்கவிருந்த கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.