டாக்டர் கேரக்டரில் முதன்முதலாக த்ரிஷா

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, தற்போதைய இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் 6 தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818,  96 மற்றும் 'சாமி 2' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஹே ஹூடே என்ற மலையாள படத்தில் நடிக்கும் த்ரிஷா, மலையாளத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங்கும் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குனர் திருஞானம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் த்ரிஷா முதன்முதலில் டாக்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் த்ரிஷாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

More News

2.0 எமிஜாக்சனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும்

'மெர்சலை அடுத்து டுவிட்டர் இமோஜியை பெறும் 2 படங்கள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பெயரில் டுவிட்டர் இமோஜி பெற்ற ஒரே படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

'விவேகம்' படத்தை பின்தொடரும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதியின் புதிய படமான 'ஜூங்கா' திரைப்படம் தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. 'வனமகன்' சாயிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்

மலைக்க வைக்கும் 'மெர்சல்' ரிலீஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' தீபாவளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் எத்தனை நிமிடங்கள்? அட்லி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதுப்புது செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே வருகிறது.