விடாமுயற்சி' ரிலீஸ்.. திரையரங்குகளில் பார்த்து ரசித்த த்ரிஷா, ஆரவ், ரெஜினா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த "விடாமுயற்சி" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் த்ரிஷா, ரெஜினா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் உட்பட, இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களும் படத்தை பார்த்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"துணிவு" திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் படம் ரிலீஸ் ஆகிறது என்பதால், அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இந்திய நேரப்படி இன்று அதிகாலையே "விடாமுயற்சி" திரைப்படம் திரையிடப்பட்டு, காலை 7:00 மணி முதல் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 90% பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், அஜித்தை வைத்து ஒரு அதிரடியான ஆக்சன் படத்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மகிழ் திருமேனி கொடுத்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் பின்னணி இசையில் அனிருத் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்றும் சமூக வலைதள விமர்சனங்களில் பேசப்படுகிறது.
Trisha & Regina watching #VidaaMuyarchi 🍿💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 6, 2025
pic.twitter.com/7ouNSj9WfS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com