மணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த உதவி!

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் பாதிக்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் அவர்களில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே.

த்ரிஷா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மணிரத்னம் தயாரித்து வரும் ’வானம் கொட்டட்டும்’ என்ற படத்திற்காக த்ரிஷா ஒரு உதவியை செய்ய உள்ளார்.

மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’வானம் கொட்டட்டும்’ என்ற படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 4 வது சிங்கிள் பாடலை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘என்னுயிர் காற்றே’ என்று தொடங்கும் இந்த பாடல் சித்ஸ்ரீராம் இசையில் சிவா ஆனந்த பாடல் வரிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த இன்று மாலை 5 மணிக்கு த்ரிஷா இந்த பாடலை வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..!

அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும்.

ஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..! இணையத்தில் வைரலான வீடியோ.

அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஹோட்டல் அறையில் எலியைக் கண்டவருக்கு வாயில் வார்த்தை வரவில்லை. ரிசப்ஷனுக்கு போன் செய்து 'என் ரூம்ல ஜெர்ரி இருக்கு வந்து உதவி பண்ணுங்கன்னு' மெசேஜ் பாஸ் செய்துவிட்டார்.

கலைமாமணி நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்

பழபெரும் நடிகை கலைமாமணி நாஞ்சில் நளினி நேற்று காலமானார்

கீர்த்திசுரேஷ் நடிக்கவிருந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: பரபரப்பு தகவல் 

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' மற்றும் அஜீத் நடித்து வரும் 'வலிமை' ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்கும் திரைப்படம் 'மைதான்'

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை