close
Choose your channels

விஜய், விஜய்சேதுபதி படங்களின் அபூர்வ ஒற்றுமை: த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’கில்லி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’96’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பதும் இந்த இரண்டு படங்களிலும் நடிகை த்ரிஷா தான் ஹீரோயின் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் த்ரிஷா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு படங்களுக்கும் இடையில் உள்ள அபூர்வ ஒற்றுமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’கில்லி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது இருவரும் பேருந்தில் விமான நிலையத்தை நோக்கி செல்வார்கள். அதேபோல் 96 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் விமான நிலையத்தை நோக்கி செல்வார்கள்.

அதன்பின்னர் ’கில்லி’ படத்தில் விமான நிலையத்தில் த்ரிஷாவிடம் டிக்கெட்டை விஜய் கொடுப்பது போலவே 96 படத்திலும் த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி டிக்கெட்டை கொடுக்கும் காட்சி உண்டு. பின்னர் இருவரும் உணர்ச்சி பிழம்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்கும் காட்சிகளும் இரண்டு படங்களிலும் உண்டு.

அதன் பின்னர் த்ரிஷாவை வழியனுப்பிவிட்டு விமான நிலையத்தில் இருந்து விஜய் திரும்புவதும், அதேபோல் த்ரிஷாவை அனுப்பிவிட்டு விஜய் சேதுபதி காரில் திரும்புவதுமாக காட்சிககளும் விமானத்தில் த்ரிஷா தனியாக உட்கார்ந்து வருத்தப்படுவது போன்ற காட்சிகளும் இரண்டு படத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளது.

இந்த அபூர்வ ஒற்றுமையை குறிப்பிடும் வகையில் த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.