close
Choose your channels

21 வருடங்களுக்கு முன் இதே நாள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள் 

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதியில் தான் ’மிஸ் மெட்ராஸ்’ என்ற டைட்டிலை வென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு ’மிஸ் மெட்ராஸ்’ என்ற பட்டத்தை வென்றதன் மூலம் தனது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’மிஸ் மெட்ராஸ்’ பட்டம் வாங்கியபோது தான் அணிந்திருந்த கிரீடம் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.