தல அஜித் பாணியில் செல்லும் த்ரிஷா?

  • IndiaGlitz, [Tuesday,March 19 2019]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் சுஜாய் கோஷ் நடித்த 'பாட்லா' திரைப்படம் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை என்னவெனில் கணவர், குழந்தை என்ற குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் டாப்சிக்கு ஒரு கள்ளக்காதலன். ஒருநாள் திடீரென கள்ளக்காதலன் மரணம் அடைய, போலீஸ் டாப்சியை கைது செய்கிறது. அதன்பின் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களும், வழக்கறிஞர் அமிதாப் வாதமும் தான் படத்தின் முடிவு.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டாப்சி கேரக்டரில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதேபோல் அமிதாப் கேரக்டரில் ஒரு முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே அமிதாப் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடித்து வரும் நிலையில் அமிதாப்பின் இன்னொரு படத்தின் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் உருவான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது இரண்டாவது தயாரிப்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் கட்சி தலைவர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர்களை அறிவித்து அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில்

சி.கே.குமரவேல் விலகல்: மக்கள் நீதி கட்சி விளக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பிரமுகர் சி.கே.குமரவேல் விலகியுள்ள நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 

தேர்தல் 2019: நடிகை ரோஜாவுடன் மோதும் விஜயகாந்த் பட நடிகை?

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது,

திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார்.