close
Choose your channels

சன் டிவிக்கு த்ரிஷா விடுத்த வேண்டுகோள்

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியாகி ஒரு மாதமாக சென்னை உள்பட அனைத்து திரையரங்குகளில் இன்னும் நல்ல வசூலை கொடுத்து வருகிறது. ராம், ஜானு கேரக்டர்கள் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்டதால் ரிப்பீட் ஆடியன்ஸ்கள் அதிகம் வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் திரையரங்குகளில் கூட்டம் கணிசமாகவே குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்த படத்தின் நாயகி த்ரிஷா கூறியபோது, '96' திரைப்படம் ஐந்தாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்புவதில் எங்கள் டீமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே '96' திரைப்படத்தை தீபாவளி அன்று ஒளிபரப்பாமல் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவின் கோரிக்கையை சன் டிவி ஏற்று கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.