சூப்பர் ஹிட் படத்தை பார்த்த த்ரிஷா.. என்ன கமெண்ட் போட்டிருக்கார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

நடிகை த்ரிஷா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் பார்த்த படத்தின் வீடியோவை பதிவு செய்து அதை கமெண்ட் அளித்துள்ளதை எடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி மற்றும் டொவினோ தாமஸ் என தென்னிந்திய பிரபலங்களுடன் இணைந்து நடித்து வரும் பிசியான நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள த்ரிஷா அவ்வப்போது தான் நடிக்கும் திரைப்படம் மற்றும் சில அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சற்றுமுன் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை ஓடிடியில் பார்த்த வீடியோவை பதிவு செய்து ’All heart’ என்ற கமெண்டை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.240 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பதும் சிதம்பரம் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை.. ஸ்டார் பட அனுபவம் குறித்து இளன்..!

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு நன்றி கூறி இளன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். அந்த பதிவில்

விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி.. இது அந்த நடிகருக்கு தெரியுமா?

விவாகரத்தான பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை என விஜய் டிவி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி கூறியுள்ள நிலையில் இது அந்த நடிகருக்கு தெரியுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர் கைது.. என்ன காரணம்?

பிரபல பாடகரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

நடிகை த்ரிஷா தற்போது அஜித் உடன் 'விடாமுயற்சி' மோகன்லாலுடன் 'ராம்' கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்' சிரஞ்சீவி உடன் 'விஸ்வாம்பரா' மற்றும் டொவினோ தாமஸ் உடன் 'ஐடெண்டிட்டி'

எதிர்பாராமல் நடந்த கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே பிரபல சீரியல் நடிகை பலி..!

எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.