close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு இதுவே காரணம்: த்ரிஷா

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் முதல்நாளில் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வசூல் அளவில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் தனது விருப்பத்திற்கு உரியவர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரகுமான் ஆகியோர்களின் கூட்டணியே என்றும் இந்த கூட்டணி எப்போதும் வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே த்ரிஷா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos