'விடாமுயற்சி' வீடியோவை வெளியிட்ட த்ரிஷா.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித், த்ரிஷா நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூலிலும் சக்கை போடு போடுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ’மங்காத்தா’ திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு, அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள த்ரிஷா கேரக்டர் மிகவும் வித்தியாசமானதாக இருந்ததாகவும், அவருடைய கேரக்டர்தான் இந்த படத்தின் மைய புள்ளி என்றும் படம் பார்த்தவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, த்ரிஷா சற்றுமுன் தனது எக்ஸ் பக்கத்தில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோக்களை பதிவு செய்து, "இந்த அற்புதமான குழுவுடன் இந்த திரைப்படத்தில் பணிபுரிந்தது எனக்கு மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Legit,one of the best rides(pun intended)I’ve had with this fantabulous team making this film🥰🧿
— Trish (@trishtrashers) February 7, 2025
Thank you team #VidaaMuyarchi pic.twitter.com/CNgxOOp7W3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments