'தக்ஃலைப்' படத்தின் சூப்பர் அப்டேட்.. த்ரிஷா வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் குறித்த வீடியோவை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களாக ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல் கட்டமாக கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள், அதன் பிறகு வேறு சில நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இன்றைய படப்பிடிப்பில் த்ரிஷாவின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் அதற்கான சீன் பேப்பர்கள் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த காட்சியையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து த்ரிஷா இன்று முதல் ’தக்ஃலைப்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் அடுத்த வாரம் முதல் ஜெயம் ரவி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அடுத்தடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிறகடிக்க ஆசை: பொறுத்து பொறுத்து பார்த்த முத்து.. உண்மையை உடைக்க இருப்பதால் பரபரப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் இதுவரை அடக்கி வைத்திருந்த உண்மையை முத்து உடைக்கும்

என் தங்கச்சிக்கு மார்க் கொஞ்சம் பாத்து போடுங்க: சூப்பர் சிங்கர் ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரை பார்த்து இவர் என் தங்கச்சி, மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்க என ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை.. விஜய்யை மறைமுகமாக தாக்குகிறாரா கமல்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 'தளபதி 69' படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்

அடுத்தகட்ட பணியை தொடங்கிய சூர்யா.. ரிலீசை நோக்கிய 'கங்குவா' திரைப்படம்..!

நடிகர் சூர்யா நடித்து வந்த 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது

நான் இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் தான்.. முதல் பாலிவுட் படத்திற்கே விருது பெற்ற நயன்..!

நடிகை நயன்தாரா பாலிவுட் திரையுலகில் முதல் திரைப்படமாக ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்த நிலையில் முதல் பாலிவுட் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.