அதிரடி ஆக்சன் காட்சிகளில் மீண்டும் த்ரிஷா

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்டண்ட் காட்சி உள்பட அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த த்ரிஷா, தற்போது 'கர்ஜனை' என்ற படத்திலும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இன்னொரு படத்தின் டைட்டிலான 'கர்ஜனை' படத்தில் த்ரிஷா, டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் உதவியுடன் நடித்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மது என்ற மேற்கத்திய நடனக்கலைஞராக த்ரிஷா இந்த படத்தில் நடித்திருப்பதாகவும், அவர் கொடைக்கானலுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது ஒரு மிகப்பெரிய சிக்கலில் சிக்கி கொள்வதாகவும், அந்த சிக்கல் என்ன? அந்த சிக்கலில் இருந்து அவர் விடுபட்டாரா? என்பது தான் கதை என்றும் இயக்குனர் சுந்தர்பாலு தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷாவின் அறிமுக காட்சியே சண்டைக்காட்சிதான் என்றும், மாஸ் நடிகர்களுக்கு இணையாக அவர் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளது திரையில் பார்க்கும்போது ஆச்சரியப்பட வைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்...

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்! விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது...

தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கடிதம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி[' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது....

தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி

கோலிவுட் திரையுலகில் இளம் வயதிலேயே நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முக்கிய துறைகளில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் கால்பதித்துள்ளார். அவர் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி' வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

பாகுபலி'க்கு பின் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் சத்யராஜ்-ராணா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்த சத்யராஜ் மற்றும் ராணா மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளனர்...