'த்ரிஷ்யம்' இயக்குனர் ஜீத்துஜோசப்பின் அடுத்த பட ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

ஜீத்துஜோசப் இயக்கிய மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம்' மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆன இந்த படம் உலக நாயகன் கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பால் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது என்பது இந்த படத்தின் சிறப்பு ஆகும்.

இந்நிலையில் த்ரிஷ்யம், பாபநாசம் படங்களை அடுத்து ஜீத்துஜோசப் இயக்கியுள்ள 'லைஃப் ஆப் ஜோசுட்டி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரடொக்ஷன் ஆகியவை முடிந்து தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஜயகாந்த் தம்பியாக 'ராஜ்ஜியம்' என்ற படத்திலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த முன்னணி நடிகர் திலீப் 'லைஃப் ஆப் ஜோசுட்டி' படத்தில் நடித்துள்ளார். இவருடன் ரச்சனா நாராயணகுட்டி, கலாபவன் மணி ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜீத்து ஜோசப்பின் முந்தைய படம் போலவே இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, அடுத்தடுத்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

கமல், அரவிந்தசாமியை அடுத்து சிம்புவை டார்கெட் செய்த குஷ்பு

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமாக இவரை ரசித்தனர்.....

ஜெயம் ரவியின் 'பூலோகத்திற்கு விடிவு காலம் வருமா?

ரோமியோ ஜூலியட்', 'சகலகலாவல்லவன்' மற்றும் 'தனி ஒருவன்' ஆகிய மூன்று படங்களை கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மூன்று மாதங்களில் வெளியிட்டு முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் ஜெயம் ரவி......

தமிழிலும் இந்தியிலும் பிசியான வடிவேலு நாயகி

வடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீனாட்சி தீக்சித், சமீபத்தில் ஒரு தமிழ் படத்திலும், இந்தி படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.......

'ஜிந்தா' படத்தில் கார்த்திக் நடிக்கும் கேரக்டர்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆன கார்த்திக், சமீபத்தில் வைபவ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

ஜீவாவை விட தனுஷ் பெட்டரா?

சமீபத்தில் ரிலீசான 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவருடைய நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது......